
பொதுவாக நம்முடைய வங்கி கணக்குகளில் இவ்வளவு பணம் தான் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த ஒரு வரம்பும் கிடையாது என்பதால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், நம்முடைய கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு முறையான ஆதாரம் வைத்திரு க்க வேண்டும்.
ஒருவேளை அதிகமான தொகையை டெபாசிட் செய்யும் பொழுது அதற்கான ஆதாரத்தையும் வைத்து இருப்பது நல்லது. ஒரு நிதியாண்டில் 10 லட்சத்துக்கும் மேல் வங்கியில் டெபாசிட் செய்யும் பொழுது வங்கி கணக்கு கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளது. வங்கி கணக்கில்பணத்தை டெபாசிட் செய்வது மட்டுமில்லாமல் எஃப்டி, மியூச்சுவல் ஃபண்டு, முதலீடு போன்றவையும் கண்காணிக்கப்படும்.