
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக இருப்பதால் ஆதாரில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை எத்தனை முறை மாற்றம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்தை அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளலாம்.
பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.
முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்- பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எட்டு ஆவணங்கள்.