
எடப்பாடி பழனிச்சாமி உடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
அவர் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், இனி எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டார் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் கொங்கு மண்டலம் மாநாடு விரைவில் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.