மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் ஷர்மிளா. இவர் தமிழிலும் சில படங்களில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் பாலியல் புகார் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடிகைகள் பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில் ஷர்மிளாவும் இது தொடர்பாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு இயக்குனரை சந்திப்பதற்காக நானும் சக நடிகை ஒருவரும் சென்றோம். அப்போது திடீரென கதவை பூட்டிவிட்டு என் மீதும் ‌ அந்த நடிகை மீதும் சிலர் பாய்ந்தனர். நாங்கள் எப்படியோ அங்கிருந்து  தப்பி ஓடி வந்து விட்டோம். மேலும் என்னிடம் இதுவரை 25 பேர் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி நேரடியாகவே வந்து கேட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.