பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது. இதனால் நாள்தோறும் 15 கொலைகள் நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்ததற்கு ‌ காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டது தான் காரணம்.‌ அதிகமான அளவில் கொலை நடக்கிறது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது என்று கூறினார். இதற்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோயம்புத்தூரில் வழக்கறிஞர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு சட்டம் ஒழுங்கு தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இனியும் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் தமிழக வரலாற்றில் கையாலாகாத முதல்வர் என்று கூறப்படுவார் என்று பதிவிட்டுள்ளார்.