
தெலுங்கானாவின் சைதாபாத் பகுதியில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் கோவில் கணக்காளரை இரசாயன தூள் கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணக்காளர் தனது பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் அவரின் மேல் ஒரு மர்ம இரசாயனப் பொருளை வீசியுள்ளார். இதனால், கணக்காளர் அதிர்ச்சியடைந்து கத்தியதால், கோவிலில் இருந்த பக்தர்களும் பணியாளர்களும் அவரை மீட்க ஓடோடி சென்றனர்.
ஆனால், தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த கணக்காளர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மர்மநபர் கணக்காளரை இரசாயனத்தால் தாக்கி தப்பியோடுவது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்திய இரசாயனம் என்ன என்பதும் இன்னும் உறுதியாக தெரியவில்லை.
#Hyderabad: Acid Attack on Temple Staff
Incident Reported at Saidabad Police StationGopi, an accountant at the Saidabad Bhu Lakshmimma Temple, was attacked with acid by unidentified individual. The entire incident was captured on CCTV cameras installed in the temple . Temple… pic.twitter.com/PYfAA78Y1e
— NewsMeter (@NewsMeter_In) March 14, 2025