
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள குர்ராம்நகர் சாலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதங்களை உருவாக்கியுள்ளது.
மே 19 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் பைக்கில் சுவாரஸ்யமாக ஒரு இளைஞனுடன் பயணம் செய்கிறார், அதே நேரத்தில், திடீரென அந்தப் பெண் பையனை செருப்பால் அடிக்கத் தொடங்குகிறார். வீடியோவில், இருவருக்கும் இடையே சில வாக்குவாதங்கள் நடைபெறும் காட்சிகளும் காணப்படுகிறது.
लखनऊ: युवक की चप्पल से पिटाई का वीडियो वायरल, बाइक पर बैठी युवती युवक को चप्पल से पीट रही
युवती पीछे से चप्पलों से युवक को पीट रही है, 19 मई का बताया जा रहा है वायरल वीडियो, खुर्रमनगर मार्ग का बताया जा रहा वायरल वीडियो#LucknowNews #ViralVideo #ChappalAttack #DesiDrama… pic.twitter.com/3DYXmcv4cE
— Lallu Ram (@lalluram_news) May 20, 2025
“>
இந்த வீடியோவை யாரோ ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதுடன், அது விரைவாக நெட்டிசன்களிடையே பரவி, பலர் அதில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெண் மீண்டும் மீண்டும் பையனை அடிக்கும் இந்த காட்சி குறித்து, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது… சிலர் அந்தப் பெண்ணின் நடவடிக்கையை கண்டிக்கதக்கது எனவும் , ஒரு சிலர் முழுமையான விசாரணை தேவை என வலியுறுத்துகின்றனர்.