
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேரு நகரில் ஷங்கர்-ப்ரியா தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களது மகன் சந்துரு(18) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு சந்துரு தனது நண்பரான நரேஷ்(29) என்பவருடன் மது குடித்துவிட்டு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தார். அவர்கள் என்.ஜி.ஓ காலனி மற்றும் ஆலந்தூர் இடையே இருக்கும் மின்சார ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் இருவர் மீதும் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.