ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால் ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தற்போது தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்த தோல்வி உண்மையிலேயே மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சீசன் முழுவதும் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. எங்களுடைய மோசமான ஆட்டம் தான் தோல்விக்கு காரணம். நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் கண்டிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒருவேளை ஒரு குழுவாக சிறப்பான ஆட்டத்தை நம்மால் வெளிப்படுத்த முடியவில்லை என்றால் கண்டிப்பாக இதுபோன்ற தோல்வி நிச்சயம். இந்த தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை குறிப்பிட்டு காட்டுவது இயலாத ஒன்று. இருப்பினும் அனைத்தும் எங்களுடைய வழியில் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.