
மும்பையில் நேற்று ஐபிஎல் அணி நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஐபிஎல் அணியின் உரிமையாளர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட அணிகளின் வீரர்கள் குறைந்தது 6 முதல் 7 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு டெல்லி, லக்னோ மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. மேலும் ஷாருக்கான் இளம் வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து மெகா ஏலத்தில் அவர்களை விடுவது தங்களுக்கு சிக்கல் என்றும் கூறியுள்ளார்.