
ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் போன்றோர் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோலி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் உலகக்கோப்பை போட்டியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான புரோமோ நேற்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
INDIAN TEAM PROMO FOR THE T20I WORLD CUP. 🇮🇳
– Rohit Army is ready to create history.pic.twitter.com/2jjM9wYQQW
— Johns. (@CricCrazyJohns) April 23, 2024