உத்திரபிரதேச மாநிலம் பட்காவ்லி என்னும் கிராமத்தில் ஸ்ரீதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த கிராமத்தின் ஊர் தலைவராக இருந்து வருகிறார். இவரது கணவர் பல்ராம் ஆவார் இவர் மீது காவல் நிலையத்தில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் சம்பவ நாளன்று பல்ராம் அவரது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த பல்ராம் அவரது மனைவியின் காதை இரக்கம் இன்றி அரிவாளால் அறுத்துள்ளார். இதனால் அவரது மனைவி வலியில் துடித்துள்ளார்.

அத்துடன் விடாமல் மனைவியை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட ஸ்ரீதேவி காவல் நிலையத்திற்கு சென்று இச்சம்பவம் பற்றி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்ராமை கைது செய்ததுடன் அவரை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர் இறுதியாக மனைவியிடமும் இவ்வாறு நடந்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.