இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதற்கு போட்டியாக அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மலிவு விலை திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் புதிய டேட்டா பூஸ்டர் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வரம்பற்ற 5g டேட்டா இல்லாமல் திட்டங்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்காக இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஏர்டெல் நிறுவனம் 51 ரூபாய், ரூ.101, ரூ.151 என மொத்தம் மூன்று டேட்டா பூஸ்டர்களை கொண்டு வந்துள்ளது. தற்போது உள்ள அடிப்படை திட்டங்கள் முறையே வரம் பெற்ற 5g மற்றும், 3GB, 6GB மற்றும் 9 ஜிபி தரவுகளுடன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.