
மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை நோக்கி பயணிகள் விரைவு ரயில் சென்றது. அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் கருணாநிதி என்பவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் தலைமை காவலராக வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் குடிபோதையில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறி உள்ளார் இதனையடுத்து கால்களை இழந்த கருணாநிதியிடம் நான் போலீஸ். நான் மட்டும் தான் சீட்டில் உட்காருவேன். நீ தரையில் உட்காரு என மிரட்டி அவரை தாக்கியுள்ளார்.
அதற்கு கருணாநிதி மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பெட்டியில் போலீசாக இருந்தாலும் ஏறக்கூடாது என கூறியதால் கோபமடைந்த பழனிவேல் அவரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கியுள்ளார். இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பழனிவேல் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.