கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், ஜூலை 1 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்கள் சென்றடையும் எனவும் கூறினார். இந்நிலையில் இது குறித்த புகைப்படங்களை, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது, ஏமாற்றுதல், பித்தலாட்டம், மோசடி ஆகிய 3 செயல்பாடுகளை காங்கிரஸ் & திமுக அரசியலில் மந்திரமாக கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தல் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றுவது குறித்து, திமுகவிடம் இருந்து காங்கிரஸ் நன்கு கற்றுக்கொண்டதாக தெரிகிறது. மக்களை எப்போதுமே ஏமாற்றி வைத்திருக்க முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.