
ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக்கை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்.
ஆனால் இன்று அதிகாலை முதலே சந்தா செலுத்திய பல பிரபலங்களில் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இதில் நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஷ்பு, ‘ஏன் எனது ப்ளூ டிக் ஒரே இரவில் காணாமல் போனது? எனது கணக்கு ஆக்டிவாக உள்ளது. ஆனால், மறுபரிசீலனை செய்வதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதற்கு என்ன அர்த்தம்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.