உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப். இவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருந்தது .அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் திலீப் திடீரென்று அஞ்சலியின் தாய் மற்றும் தந்தையை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் அங்கு வந்த போலீசார் திலீப் மற்றும் அவருடைய சகோதரர் தீபக், மாமா, தந்தை ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் .அதன் பிறகு இரு தரப்பினரும் பேசி சமாதானமாகி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.