வங்கதேச நாட்டில் உள்ள சிட்டகாங் பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். ஆனால் அவர் தன் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் அவருடைய முதல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் அவர் ரயிலில் சென்றார். அப்போது அவருடைய முதல் மனைவி ஓடி வந்து என்னை விட்டுட்டு போகாதீங்க என்று பாச போராட்டம் நடத்துகிறார். ஆனால் அந்த கொடூர கணவனோ அந்த பெண் ரயிலில் ஏறி விடக்கூடாது என்பதற்காக எட்டி உதைத்து விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.