உலகம் முழுவதும் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருப்பதை காணலாம். இதன் மூலம் நன்மைகள் நடந்தாலும் பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக பிரபலங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வைரலாக்கப்படுகிறது. இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியை உருவாக்கி அது தொடர்பான வீடியோவை எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது மஸ்க் வெளியிட்ட பேஷன் ஷோ வீடியோவில் இந்திய பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர்களான முன்னாள் அமெரிக்க அதிபர்களான ஒபாமா, டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், போப் பிரான்சிஸ் போன்ற பல முக்கிய தலைவர்கள் நடந்து வருவது போன்று இருக்கிறது. இதில் பிரதமர் மோடி பல நவீன உருவங்கள் ஒன்றிணைந்த பல வண்ணங்களால் உருவாக்கப்பட்ட உடை அணிந்து நடந்து வருவது போன்று இருக்கிறது. அதன் பிறகு அதிபர் பைடன் சர்க்கர நாற்காலியில் வருவது போன்று இருக்கிறது. டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்களை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு சூப்பர் ஹீரோ உடை அணிந்து மஸ்க் நடந்து வருவது போன்று இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு மஸ்க் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் அதிபர் பைடன் சர்க்கர நாற்காலியில் வருவது போன்றும் கமலா ஹாரிசை சர்சையான உடை அணிந்து வருவது போன்றும் உருவாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.