
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமாக பல வருடங்களாக தோனி இருந்து வருகிறார். கடந்த வருடம் அவர் கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்து விட்டார். தற்போதைய கேப்டனாக ருதுராஜ் தான் இருக்கிறார். தோனி இன்னும் சில வருடங்கள் தான் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்பதால் அவரை பார்க்க அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் கூடுகிறார்கள். இதன் காரணமாக டிக்கெட் விலையும் பல மடங்கு அதிகமாக கள்ளச்சந்தையின் விற்கப்பட்டு வருகிறது.
ஆனால் அணிக்கு தேவைப்படும்போது அதிரடியாக விளையாடாமல் கடைசிலையே தோனி களமிறங்கி விளையாடி வருகிறார். இதனால் போட்டியில் முடிவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் தோனி குறித்து பேசி உள்ள சேவாக், “இதுபோன்ற நிலைமை ஏற்படும் போது ஒரு வீரனால் ஒன்று இரண்டு போட்டிகளை தான் வெற்றிகரமாக முடிக்க முடியும்.தோனி இதுவரை அக்சர் படேலுக்கு எதிராகவும், இர்ஃபான் பதானுக்கு எதிராகவும் இதுபோல வெற்றிகரமாக முடித்துள்ளார். ஆனால் சமீப காலமாக தோனியால் அந்த போட்டியை அப்படி முடித்து வைக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.