பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர் சல்மான்கானுக்கு 58 வயது ஆகும் நிலையில் இதுவரை ‌ திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சல்மான்கான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.

அதாவது அந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் எழுந்து நிற்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் நாற்காலியில் இருந்து எழ முடியவில்லை. அவர் நிற்க கூட முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். இந்த வீடியோ மிகவும் அதிகமாக பகிரப்படும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் சில ரசிகர்கள் எங்கள் ஹீரோவுக்கு வயதாகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு ரசிகர் ஒருவர் எங்களுக்கு பிடித்தமான ஹீரோவை வயதானவராக பார்ப்பது கவலை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.