
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நட்டா ஐந்து வருடங்களாக நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு மாநிலமாக பாஜக ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களிலும் பாஜக அலுவலகம் இருக்க வேண்டும், அந்த அலுவலகம் கோவிலாக வீடாக இருக்க வேண்டும், இதற்கு மக்கள் உரிமையோடு வந்து செல்ல வேண்டும். அனைத்து பாஜக அலுவலகங்களிலும் நூலகங்கள் உள்ளது. நாம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.
அதனால் நம் மீது கல்லையும் மண்ணையும் வீசுகிறார்கள். பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் மக்கள் மனதில் எல்லாம் தங்க ஆரம்பித்துவிட்டது. அனைத்து இடங்களிலும் நம்முடைய பிரதமர் மோடி தான் குடியிருக்கின்றார். எதிர்க்கட்சியினரால் மக்களிடம் பேச முடியவில்லை. அவர்களின் எந்த ஒரு திட்டமும் மக்கள் பக்கத்தில் போக முடியவில்லை. பிரதமர் மோடி நடுத்தர மக்களுக்காக யோசித்து மறுத்தகத்தை ஆரம்பித்தால் தமிழக அரசு அனுமதி மறுக்கின்றது. ஆனால் அந்தத் திட்டத்தை காப்பி அடித்து முதல்வர் மருந்தகம் என்று ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். பிரதமர் மோடி இதுவரை தன்னுடைய பெயரை எந்த ஒரு திட்டத்திற்கும் வைத்தது கிடையாது. நாம் மக்களுக்காக கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.