
கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பால் கேரளாவில் ஒரு வாலிபர் தற்போது உயிரிழந்துள்ளார்.
அதாவது பிரதீப், ஜீஜா எனும் தம்பதியினர் திருச்சூர் ஒருமனயூர் பகுதியில் வசித்து வருக்கிறார்கள். இவர்களுக்கு விஷ்ணு (31) எனும் மகன் இருந்துள்ளார். இவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் வாலிபர் விஷ்ணு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வந்துள்ளது.