தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் போடா போடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவை காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

தற்போது இவர்கள் இருவருக்கும் தாய்லாந்தில் ஜூலை 2-ம்  தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு முக்கிய பிரபலங்கள் பலருக்கும் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் அழைப்பிதழ் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாள் ஆகியோரின் சந்தித்து ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி ஆகியோர் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.