அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று தன்னுடைய 70-வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு  நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் எங்களுக்கும் மகிழ்ச்சி என்று முன்னதாகவே கூறியுள்ளோம். அதன்பிறகு நடிகர் விஜய் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்று தான் சம்பாதித்த பணத்தை ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் பிறந்தநாள் வாழ்த்து கூறினாலும் அது அவர்களுக்கு மிகவும் பெருமை. அதேபோன்று எங்களுக்கும் அது பெருமை என்று கூறினார்.