திண்டுக்கல் மாவட்டம்  பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர்கள் உடனடியாக 108 அவசர உறுதிக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின் சிசு பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாவது, குழந்தை பிறந்து ஓரிரு நாட்களே இருக்கும் எனவும், பெண் சிசுவாக இருப்பதினால் மர்ம நபர்கள் மரத்தடியில் விட்டு சென்றிருக்கலாம் எனவும் கூறினர். மேலும் போலீசார் குழந்தை யாருடையது எனவும் அதை யார் அங்கு விட்டு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.