
தமிழகத்தில் சமீப காலமாக கேரள பெண்கள் தான் அழகு என்ற கருத்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவிலும் கேரள நடிகைகள் அதிகம் நடித்து வருகின்றனர். அவர்கள் ஏதேனும் நிகழ்ச்சிகளில் நேர்காணலுக்காக கலந்து கொள்ளும் போதும் கூட அவர்களது அழகு குறித்த கேள்விகள் தான் எதிரே இருக்கும் தொகுப்பாளர்களிடமிருந்து அதிகம் கேட்கப்படும் கேள்வியாகவும் இதுவரையிலும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற கேரள நடிகை நிகிலா விமல் நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ளும்போது தொகுப்பாளர் அவரது அழகு குறித்து கேள்வி கேட்க நீங்கள் எப்படி அதை முடிவு செய்கிறீர்கள் என அவர் திரும்ப கேள்வி கேட்க, பொதுவாக கேரள பெண்கள் என்றால் தமிழக பெண்கள் பொறாமை படுவார்கள் என கூறியிருப்பார்.
அதற்கு பதிலளித்த அவர் தமிழ்நாட்டு பெண்கள் தான் அழகு. எல்லோருமே அழகு அதிலும் தமிழ்நாட்டுப் பெண்கள் அழகு. எங்களுக்கு அவர்களை பார்க்கும்போது பொறாமை ஏற்படும் என்று அவர் பதில் அளித்தார் . இதை பார்த்த நெட்டிசன்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மொக்கை வாங்கி விட்டார் என அவரை கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
செருப்படி வாங்கிய Anchor…#Vaazhai #vaazhamariselvaraj #MariSelvaraj pic.twitter.com/Dbujlx0yNP
— Nadu Viral (@NaduViral) August 26, 2024