தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் கல்லூரு என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு நீர்நிலையின் குறுக்கே பாலம் இருந்த நிலையில் அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு வர மக்கள் வழி தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் தற்போது வாலிபர் ஒருவர் செய்த விஷயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததோடு அதை தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது இரு கரைகளையும் இணைக்கும் விதமாக ஒரு பெரிய பைப்பை அக்கறையில் இருந்து இக்கரைக்கு வைத்தார் வாலிபர். பின்னர் அந்த வாலிபர் பைப்பின் மீது மெதுவாக ஊர்ந்து சென்று கரையை கடக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.