ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகையான நேஹா திவேதி போட்டியை நேரில் காண பேமிலி எமர்ஜென்சி என அலுவலக மேனேஜரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். டிவியில் போட்டியை பார்த்தபோது திவேதியை கண்டு அதிர்ந்த மேனேஜர் பிறகு அவரிடம் உங்களை சோகமான முகத்துடன் மைதானத்தில் பார்த்தேன் என்றதும் நேஹாவுக்கு தூக்கி வாரி போட்டது. இது தொடர்பான கலந்துரையாடல் ஸ்க்ரீன் ஷாட்டை நேஹா தனது வலைதள பக்கத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.