
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் சோஹைல் ஷேக். இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 45 வயதான இவர் கடந்த ஜனவரி மாதம் 28 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்த சில மாதங்களில் இருந்து தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு தனக்கு பணம் தேவை என்றும் தகராறு செய்யத் துவங்கியுள்ளார். இந்நிலையில் இரண்டாவது மனைவியை தனது முதலாளியுடன் பாலியல் உறவில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சோஹைல் தனது இரண்டாவது மனைவியிடம் மூன்று முறை தலாக் என்று கூறியுள்ளார்.