
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட 14 வயது சிறுமி தொடர்பான விசாரணை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்துள்ளது. சிறுமியின் உறவினரால் கொடுக்கப்பட்ட மிஸ்ஸிங் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, சிறுமி தந்தை வெளியூரில் வேலை செய்து வந்ததால், சிறுமி தாயுடன் தனியாகவே வசித்து வந்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர், சிறுமி தாயின் நடத்தை குறித்து தவறாக பேசியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்த, வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. தாயிடம் வினவியபோது, தனது மகளின் குணாதிசயங்கள் பிடிக்காத காரணத்தால் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்து, தனது குற்றத்தை மறைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனையிலும் சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மூன்று நீதிபதிகள் கொண்ட தலைமை அமர்வு, 50க்கும் மேற்பட்ட விசாரணைகள் மற்றும் ஏழு முக்கிய சாட்சிகளை அடிப்படையாக கொண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் நீதிமன்றம், சிறுமியின் தாய்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.