
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் ராஜன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இசக்கிதுரை என்பவர் நின்று கொண்டிருந்தார். இவரிடம் முதியவர் பணம் கொடுத்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதோடு தன் வீட்டில் வெளியூரை சேர்ந்த சில பெண்களை விபச்சாரத்திற்காக தங்க வைத்துள்ளதாகவும் என்னிடம் பணம் தந்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதை கேட்டு இசக்கிதுரை (40) மிகவும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நாசரேத் காவல் நிலையத்தில் முதியவர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வீட்டை சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 3 இளம் பெண்கள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் நெல்லை டவுன், நாசரேத் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த பெண்களை காவல்துறையினர் மீட்ட நிலையில் முதியவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.