தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவர் நடிப்பில் சமீபத்தில் ஆவேசம் திரைப்படம் வெளியாகி 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் நடிகர் பகத் பாசிலிடம் ஒரு பேட்டியில் நீங்கள் ஏன் பேட்டிக் கொடுப்பதில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு பேட்டி கொடுப்பது சுத்தமாக பிடிக்காது என்று கூறியுள்ளார். அதாவது அந்த சமயத்தில் எனக்கு என்ன பேச வேண்டும் என்பதை தெரியாது. இதனால்தான் நான் பேட்டி கொடுப்பதில்லை. என்னை பற்றி மற்றவர்கள் பேசுவதை நான் விரும்ப மாட்டேன்.

இதனால்தான் நான் படத்தில் மட்டும் நடிக்கிறேன். பார்வையாளர்களை தொடர்பு கொள்ள இது மட்டுமே எளிதான வழி. என்னுடைய படங்களை மட்டும் பாருங்கள் போதும். அந்த படம் நல்ல படமாக இருந்து உங்களுக்கு பிடித்தால் மட்டும் பார்த்தால் போதும். எனக்கு புகைப்படம் எடுப்பது பிடிக்காது. பொதுவாக என் அம்மா மற்றும் மனைவியுடன் வெளியே செல்லும் போது புகைப்படங்கள் எடுப்பதை விரும்ப மாட்டேன். எனவே அந்த சமயத்தில் நீங்கள் என்னை பார்த்து சிரித்தால் மட்டும் போதும். மேலும் அதுவே எனக்கு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்று கூறியுள்ளார்.