
ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. நாடு முழுவதும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் உள்ள ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியது. அதாவது 8 ஆம் வகுப்பு படிக்கும் பதினான்கு வயது பிரியான்ஷி, தனது குடும்பத்தினருடன் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து பிரியான்ஷியின் மரணம், விராட் கோலி ஒரு ரன் மட்டுமே எடுத்து சீக்கிரமே ஆட்டமிழந்ததுடன் தொடர்புடையது என்ற வதந்திகள் விரைவாகப் பரவின. இருப்பினும், அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகு, அவரது தந்தை அஜய் பாண்டே, இது உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது சம்பவம் நடந்தபோது தான் வீட்டிலிருந்து வெளியே இருந்ததாக பாண்டே விளக்கினார். அதாவது அவர் கூறுகையில், ” நியூசிலாந்தின் இன்னிங்ஸைப் பார்த்துவிட்டு, சந்தைக்குச் சென்றிருந்தேன். பிரியான்ஷி மயங்கி விழுந்ததாக எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வீட்டிற்கு சென்றேன். ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் தனது மகளின் மரணத்திற்கும் விராட் கோலியின் விக்கெட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அது ஒரு துயரமான தற்செயல் நிகழ்வு என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.