மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளியாக கருதப்பட்ட நிலையில் அவர்தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் அவர்தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் நாளை அவருக்கு தண்டனை வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் சஞ்சய் ராயின் தாய் மாலதி ராய் (70) இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, என்னுடைய மகனுக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும்.

அவரைத் தூக்கில் போடுவேன் என்று சொன்னால் கூட நான் அதனை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய மகன் குற்றவாளி என்றால் கண்டிப்பாக அவன் தண்டிக்கப்பட வேண்டும். எனக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். எனவே உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் வலியை நானும் உணர்கிறேன் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக சஞ்சய் ராய் சகோதரி கூறும் போது, என்னுடைய தம்பி நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பயங்கர சம்பவத்தை செய்துள்ளார். இதை சொல்லும்போதே என்னுடைய இதயம் உடைகிறது. பாதிக்கப்பட்டவர் என்னை போன்ற ஒரு பெண். மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்கினாலும் அதைப்பற்றி கவலை கிடையாது நாங்கள் கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்