இணையத்தில் தற்போது தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, ஹோட்டல் ஒன்றில் நடந்த மோதலைக் காட்சிப்படுத்துகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண் வாடிக்கையாளர் மற்றும் ரிசெப்ஷனிஸ்ட் இடையேயான கடும் வாக்குவாதம்  ஏற்படுகிறது. ஹோட்டலின் உள்ளும் புறமும் இருந்து படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோவில், வாடிக்கையாளர் புக்கிங் கவுண்டருக்கு அருகே நின்று  ரிசெப்ஷனிஸ்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

 

சில விநாடிகளுக்குள், உரையாடல் தீவிரமாகி, வாடிக்கையாளர் தன்னுடைய கைகளில் இருந்த பொருளை கவுண்டர் ஜன்னலுக்குள் எறிந்து, ரிசெப்ஷனிஸ்டை குறிவைக்கிறார். இதையடுத்து, ரிசெப்ஷனிஸ்ட் வேகமாக தனது இடத்திலிருந்து வெளியேறி, வாடிக்கையாளரை புரட்டி எடுத்தார்.

வாடிக்கையாளர் உடல் பெரிதாக இருந்தாலும், ரிசெப்ஷனிஸ்டின் அதிரடியான தாக்குதலால் அவர் திகைத்து போகிறார். தன்னைக் காப்பாற்ற தன் கைப்பை மூலம் எதிர்ப்பதற்குப் போராடும் வாடிக்கையாளரை, ரிசெப்ஷனிஸ்ட் தலைமுடியைப் பிடித்து கீழே இழுத்து,  கடுமையாக தாக்குகிறார். பின்னர், மற்றொரு ஹோட்டல் ஊழியர் திடீரென வந்து மோதலை நிறுத்த முயற்சிக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.