கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி தாய் வீட்டுக்கு சென்றதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அதாவது தன்னுடைய ஆட்டோவில் தன் மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார் என்று நோட்டீஸ் ஒட்டி உள்ளார். அன்று சவாரி செய்த அனைவருக்கும் பிஸ்கட்டை வழங்கியுள்ளார். இதனை ஒரு பயணி புகைப்படம் எடுத்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிரவே தற்போது அது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் நடிகர் ஜனகராஜ் ‌என் மனைவி ஊருக்கு போயிட்டா ஊருக்கு போயிட்டா என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அதேபோன்று தற்போது இந்த ஆட்டோ ஓட்டுநரும் தன் மனைவி ஊருக்கு சென்றதை கொண்டாடுகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் வைரலாகிவரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.