
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி தொடங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் தான் கட்சி ஆரம்பித்ததற்கான காரணம் மக்களுக்காக செய்யவிருக்கும் விஷயம் கொள்கை தலைவர்கள் மற்றும் அரசியல் எதிரில் என பல்வேறு விஷயங்களை அறிவித்ததோடு அவர் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் தன் மகனை நினைத்து பூரித்து பேசிய ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது மாநாட்டில் என் புள்ள கலக்கிட்டாரு. அவர் இப்படி பேசுவார் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. அவர் சினிமாவில் எப்படி நடிப்பார் என்று தெரியும். ஆனால் ஒரு பொதுக்குழு மேடையில் அரசியலில் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று பெருமிதமாக தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
SAC அப்பா தன் மகனை நினைத்து பூரித்து பேசியது ❤️❤️❤️ pic.twitter.com/wtP6JDp29S
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) November 21, 2024