பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டிராகன். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அந்த படத்தை தானே இயக்கியும் இருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது இதன் மூலமாக பிரதிப் ரங்கநாதன் ஹீரோவாக உருவெடுத்தார்.  அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும்  LIK படத்திலும் ஹீரோவாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்திலும் நடித்தார்.

இந்த படம் தற்போது வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் வெளியான சில நாட்களிலேயே 50 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய பதிவு ஒன்றை வைரலாகி வருகிறது. அதாவது, 2017 ஆம் வருடம் அவர் எடுத்த குறும்படம் ஒன்றை தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டு அதனை தனுஷ் பார்க்கும்படி கேட்டுள்ளார். அவர் எடுத்த அப்பா லாக் என்ற குறும்படம்  moviebuff குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்றது.

இந்த படத்தை நீங்கள் பார்த்தால் நான் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன் தனுஷ் சார் என்று 2017 ஆம் வருடம் ட்விட்டர் போட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அன்று தன் குறும்படத்தை பார்க்கும்படி தனுஷை கேட்ட பிரதீப் இன்று இவர் இயக்கிய படத்துக்கு தானே ஹீரோவாக நடித்த படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்று பேசுகிறார்கள்.