அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னுடைய நண்பர் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைத்து மிகவும் வருத்தம் அடைகிறேன். இதற்கு கடும் கண்டனங்கள். அரசியல் மற்றும் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தால் காயமடைந்தோர் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.