ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதனால் பாகிஸ்தான் 4 நாட்களாக இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததோடு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் உள்ளிட்ட பகுதிகளின் மீதும் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதலின் போது சில ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த வகையில் நேற்று இரவு போர் நிறுத்தத்திற்கு பிறகு பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய ஆயுதப்படைகள் அவர்களை எதிர்கொண்டனர். அப்போது சுரேந்திர மொகா என்ற ராணுவ வீரரும் பணியில் இருந்தார்.

இவர் பாகிஸ்தான் நடத்திய எறிகுண்டு தாக்குதலில் வீர மரணம் அடைந்த நிலையில் அவருடைய உடல் தேசியக்கொடி போர்த்தி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில தந்தையின் மரணம் தொடர்பாக அவருடைய மகள் வர்திகா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடைசியாக நேற்று இரவு 9 மணி அளவில் நாங்கள் பேசியபோது என்னுடைய தந்தை ஆளில்லா விமானங்கள் பறந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தாக்கவில்லை என்று கூறினார். ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை அழித்துவிட வேண்டும். என்னுடைய தந்தை போன்று நானும் ராணுவ வீரராக வேண்டும். அவருடைய மரணத்திற்கு நான் பழிவாங்க விரும்புகிறேன். மேலும் ஒவ்வொருவராக நான் அவர்களை முடித்து விடுவேன் என்ற கோபத்தோடு கூறினார்.