கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள 7- வது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது 14 வயது மகள் விஷ்வா, உறவினர்களான சுந்தரபாண்டி, கவி உள்ளிட்டோருடன் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.

3-வது மலை வந்ததும் விஷ்வாவிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். உடனடியாக டோலி கட்டி விஷ்வா அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கண் முன்னாடியே மகன் உயிரிழந்ததால் தந்தையும் உறவினர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.