
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதனையடுத்து மே 4-ஆம் தேதி வைதேகி காணாமல் போனார்.
நேற்று முத்துசாமியின் வீட்டிற்கு அருகே காலி இடத்தில் மண்ணுக்குள் எதையோ புதைத்து வைத்தது போல தடயம் தெரிந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பழனி வட்டாட்சியர் பிரசன்னா தலைமையில் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர்.
அப்போது முத்துசாமியின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து வைதேகி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது மாரிமுத்து அடிக்கடி மது குடித்து விட்டு மாரியம்மாளை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த வைதேகி தனது தங்கை இரவு நேரம் மில் வேலைக்கு சென்ற சமயம் போதையில் இருந்த மாரிமுத்துவை கம்பியால் அடித்து கொலை செய்து வீட்டிற்கு அருகே குழி தோண்டி புதைத்தது தெரியவந்தது. இதனால் வைதேகியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.