
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் 16 வயதில் நடிக்க வந்த நிலையில் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அஜித், விஜய் மற்றும் சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனை பிரிவது போன்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இதனால் விஜய் வர்மா மற்றும் தமன்னா பிரிந்ததாக கூறப்பட்ட நிலையில் அதற்கு தமன்னா விளக்கம் கொடுக்கவும் இல்லை அதனை மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் நடிகை தமன்னா சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, நான் கேரவனில் இருக்கும் போது விரும்பத் தகாத ஒரு சம்பவம் நடந்தது. அப்போது என் கண்கள் குளமாகின. ஆனால் என்னால் அழ முடியவில்லை. ஏனெனில் படப்பிடிப்புக்கு ரெடியாக மேக்கப் போட்டிருந்தேன். இதனால் என்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டேன். என்னை நானே இந்த விஷயத்தில் இருந்து தேற்றிக் கொண்டேன் என்று கூறினார். இருப்பினும் அது என்ன சம்பவம் என்பது பற்றி தமன்னா தெரிவிக்கவில்லை. மேலும் அவருடைய பேட்டி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் என்ன சம்பவம் என்று கேட்டு வருகிறார்கள்