
மாவட்டத்தில் உள்ள கோட்டை அண்ணா நகரில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மகள் உள்ளார். நேற்று சௌந்தர்யா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சௌந்தர்யா கூறியதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி டேங்க் ஆபரேட்டர்க்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது.
சீர்வரிசையாக நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வழங்கினோம். எனது கணவர் அவரது அக்காவுடன் சேர்ந்து மேலும் நகை மற்றும் பணத்தை வாங்கி தருமாறு கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சௌந்தர்யா கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்தி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.