உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு நடந்த விவாகரத்து வரை சென்றுள்ளது. தாய் வீட்டில் இருக்கும் மனைவியை சமாதானம் செய்ய சென்றபோது மனைவியின் வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்து உள்ளார்.

இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இளைஞரின் மனைவி தன்னுடைய whatsapp ஸ்டேட்டஸில், என்னுடைய கணவரை கொலை செய்பவருக்கு 50,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என வைத்துள்ளார். இதனை ஆதாரமாக வைத்து அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.