தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு ஏராளமானோர் வந்துள்ள நிலையில் அனைவருமே அரசியலில் வென்றது கிடையாது என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கிறது. இருப்பினும் எம்ஜிஆர் அதிமுக என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். இதே போன்று விஜய்யும் எம்ஜிஆர் போன்று கண்டிப்பாக முதல் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.

அதற்கான பணிகளை விஜய் மேற்கொண்டுள்ள நிலையில் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தற்போது ரசிகர்கள் வேறு மற்றும் வாக்காளர்கள் வேறு என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக எச்சரித்துள்ளார். இன்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் நான் அரசியலுக்கு வந்த நிலையில் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். சினிமாவில் இருந்து வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு. இதை நான் என்னுடைய அனுபவத்தில் புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்காளர்களாக மாற மாட்டார்கள் என்கிற விதத்தில் விஜயை மறைமுகமாக எச்சரித்தது போன்று கமல்ஹாசன் சொன்னது இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.