
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சுகுமார் இயக்கும் நிலையில் ரஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாஸில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இறுதி கட்ட பணிகள் முடிவடையததால் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர்.
அதன்படி டிசம்பர் 6-ம் தேதி புஷ்பா 2 வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில், எதற்காக புஷ்பா 2 ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தீர்கள். படக்குழு ஜோக் அடிக்கிறதா. நீங்கள் ரசிகர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறீர்கள். மேலும் இதற்காக நான் புஷ்பா 2 படங்க்குழு மீது கோர்ட்டில் கேஸ் போடுவேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.