
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் நூதன முறையில் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் அருப்புக்கோட்டை குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அந்த பேருந்தில் நடத்துனராக வேலை பார்க்கும் ஒருவரிடம் நீங்களும் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறுங்கள். உங்களுக்கும் அதில் பொறுப்பு உள்ளது. நீங்க பயணிகளிடம் பையை பத்திரமாக வையுங்கள் என ஒரு வார்த்தை கூறினால் என்ன ஆகபபோகிறது.
உங்க வண்டிக்குள் தவறு நடந்தால் நீங்கள் தானே பொறுப்பு. உங்க வீட்டு பெண்கள் பணம் கொண்டு வந்தால் சொல்ல மாட்டீர்களா? பணத்தை இழந்தால் என்ன செய்வீர்கள். கொஞ்சம் அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.