மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த டாணாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலை ஊழியர்கள் வழக்கம் போல் கியர் சோதனை செய்ய சென்றனர். அப்போது s4 கோச் அருகே சென்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் பெட்டியின் அடியில் ஒரு நபர் மறைந்திருந்துள்ளார்.

அவரைப் பார்த்த ஊழியர்கள் ஆர்பிஎப் அதிகாரிகளின் உதவியுடன் அந்த நபரை வெளியில் வரவழைத்தனர். அவரிடம் விசாரித்த போது டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் இடார்சியிலிருந்து ஜபல்பூர் வரை (290 கிமீ) ரயிலின் பொக்கியின் அடியில், சக்கரங்களுக்கு இடையில் தொங்கியபடி பயணம் செய்தது தெரியவந்தது. இதை எடுத்து ஆர்பிஎப் அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

https://x.com/FreePressMP/status/1872266780951138344